tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாஞ்சில் சம்பத் - கருணாஸ் பிரச்சாரம்
சென்னை, மார்ச் 30- திமுக கூட்டணி ஆதரித்து, தோழமை  கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்  கொண்டு வருகின்ற னர்.

இந்த நிலையில், பிரச்சாரக் களத்தில்  திரை நட்சத்திரங்களும் திமுக தலைமை யிலான கூட்டணிக்கு ஆதரவாக களம்  இறங்குகின்றனர். அதன்படி, முக்குலத் தோர் புலிப்படைத் தலைவரும் திரைக் கலைஞருமான கருணாஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டிய லில் இடம் பெற்றுள்ளார். அவர் 10 நாட்  கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்கி றார். அவரைத் தொடர்ந்து, நடிகர் போஸ்  வெங்கட் 5 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.  மேலும், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் 13 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.

பாஜக படுதோல்வி அடையும்: தடா பெரியசாமி
சென்னை, மார்ச் 30- பாஜகவில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்த தடா பெரியசாமி சென்  னையில் செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது, பாஜகவில் பட்டிய லின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுகிறார் கள். உரிய அங்கீகாரம் இல்லை; தலை மையும் கண்டு கொள்வது இல்லை என்று  சரமாரியாக குற்றம் சாட்டினார்.

“தமிழ்நாட்டில் அண்ணாமலையின் செயல்பாடு ரொம்பவும் மோசமாக இருக்கிறது. பாஜகவை அவர் குழி தோண்டி புதைக்கும் வேலையை செய்கி றார். இதனால், தமிழ்நாடு முழுவதும் பாஜக தோற்கும்” என்றும் அவர் குறிப் பிட்டார்.