மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், மாதர் சங்க தலைவருமான மறைந்த தோழர் எம்.குப்புலட்சியின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சு.லெனின்சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் ஹோமியோபதி நோய் எதிர்ப்பு மருந்தும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.