சென்னை,ஜன.5 சென்னையில் 11 மற்றும் 17 வயது நிரம்பிய ஏழைச் சிறுமிகளுக்கு வெற்றிகர மாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து முடிக்கப் பட்டுள்ளது. இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை சூளை மேடு எம்ஜிஎம் மருத்துவ மனையில், ஐஸ்வர்யா அறக்கட்டளை உதவியுடன் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் புகழ்பெற்ற டாக்டர் கே ஆர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவமனையின் இதய அறிவியல் நிபுணர் டாக்டர் கே.ஜி.சுரேஷ் ராவ் ஆகியோர் தலைமையி லான குழுவினர் இந்த சிகிச்சையை செய்துமுடித்த னர். கடுமையான மூச்சின்மை மற்றும் கடுமையான மார டைப்பால் சென்னையைச் சேர்ந்த பேட்டரி விற்பனை செய்பவரின் 17 வயது மகள் துஷிதா அவதிப்பட்டார். ஆய்வுகளுக்குப் பின்னர் அவருக்கு விரிவடைந்த இதய தசைக் கோளாறு இருப்பதை கண்டுபிடித்த னர். புது இதயம் பெறுவ தற்காக மாநில இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான பதிவேட்டில் அவரது பெயர் பட்டியலிடப்பட்டது. இதயம் தானமாகக் கிடைத்த வுடன் அவருக்கு வெற்றிகர மாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாகர்கோயிலைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி யின் 11 வயது மகளான அகல்யாவுக்கு இதயச் செயலின்மையுடன் கூடிய உறுப்புப் பெருக்கத் தடை இதய தசைக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. இதயம் தானமாகக் கிடைத்தவுடன் அவருக்கும் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று டாக்டர் கே ஆர் பால கிருஷ்ணன் கூறினார்.ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயல்படும் ஐஸ்வர்யா அறக்கட்டளை இருவரின் அறுவை சிகிச்சைச் செலவுகளை ஏற்றுக் கொண்டது. ஏனைய உடலுறுப்புகள் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே இச்சிறு மிகளுக்கு மாற்று இதயங்கள் கிடைத்தது நல்வாய்ப்பு என்று டாக்டர் சுரேஷ் ராவ் கூறினார். ஐஸ்வர்யா அறக்கட்டளை உறுப்பினர் சித்ரா விஸ்வநாதன் கூறுகையில் தங்களது அறக்கட்டளை இதுவரை 3500 பிறவிக் கோளாறு இதய அறுவை சிகிச்சைகளுக்கும், 87 இதய மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் நிதி உதவி அளித்துள்ளது என்று கூறினார்.