சென்னை, டிச. 10- மணலி சுற்றுவட்டார சாலையோர சிறு கடை விற்பனையாளர்களின் பேரவை கூட்டம் ரமேஷ் தலைமையில் செவ்வா யன்று (டிச. 10) நடைபெற்றது. சென்னை மாவட்ட சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேரவையை துவக்கி வைத்து பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் டி.பாபு, நகர விற்பனைக் குழு உறுப்பினர் கே.பலராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராமன் பேரவையை நிறைவு செய்து பேசினார்.
எஸ்.புகழேந்தி நன்றி கூறினார். தீர்மானங்கள் வியாபாரிகள் அனைவருக்கும் மாநகராட்சி அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும், வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் மாநகராட்சி தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன, நிர்வாகிகள் தேர்வு கவுரவ தலைவராக டி.பாபு, தலை வராக டி.ரமேஷ், செயலாளராக எஸ்.புகழேந்தி, பொருளாளராக ஜி.மணி உள்ளிட்ட 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.