சென்னை, ஜூலை 29- சென்னை மாநகராட்சி 41ஆவது வட்டத் தில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சி சாத னங்கள் உறுப்பினர் பா.விமலா மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டன.
அண்ணா நகர் பெரியார் சாலையில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட நவீன அங்கன்வாடி மையம், நேரு நகர் பிரதான சாலையில் உள்ள பூங்காவில் 9.90 லட்சம் ரூபாயில் திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், எம்ஜிஆர் நகர் 5ஆவது தெருவில் உள்ள பூங்காவில் 9 லட்சத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்களை இயக்கி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் துவக்கி வைத்தார்.
இதில் மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செய லாளர் வெ.ரவிக்குமார், திமுக பகுதிச் செய லாளர் எஸ் .ஜெபதாஸ் பாண்டியன், கி.தேவன், சசிகுமார் (திமுக), ஏ.விஜய், நா.திருமுருகன் (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.