“சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில், முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6 லட்சத்து 64 ஆயி ரத்து 180 கோடிக்கு முதலீடுகள் கிடைத்துள் ளது. இதன் மூலம் நேரடி மற்றும் மறை முகமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயி ரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா திங்கள்கிழமை (ஜன.8) நடை பெற்றது. அதில் உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக ரூ. 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக ரூ. 62 ஆயி ரத்து 939 கோடி முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக ரூ. 22 ஆயிரத்து 130 கோடி. பெருந் தொழிற்சாலைகளுக்கு வலுவான விற்பனையாளர் தளத்தை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக ரூ. 63 ஆயிரத்து 573 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முத லீட்டாளர்கள் மாநாடுகள் மூலம், ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது; 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டில் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது” என்றும் முதலமைச்சர் பெருமிதம் கொண்டார்.
சிறப்புக் குழு
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும்; இதுவரை முதலீடு செய்யாதவர்களும், எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன் வாருங்கள் என்று அழைக்கிறேன்; உங்கள் எல்லோரையும் தொழில்முனைவோராக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் நல்லெண்ண தூதுவர்களாக பார்க்கிறேன். எனவே, தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.