tamilnadu

img

மின் ஊழியர் விளக்க கூட்டம்

மின்சார சட்ட திருத்த மசோதா 2018ஐ திரும்ப பெற வேண்டும், மின்துறையை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும், காலியாக உள்ள கள உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது. திட்டத் தலைவர் பி.கதிரேசன், கோட்டத் தலைவர் எல்.கோபி, கோட்டச் செயலாளர் எம்.ஜெயக்குமார், தொமுச நிர்வாகிகள் பி.சீனு, தசரதன், முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;