tamilnadu

img

சென்னை அருகே தீவாக மாறிய கிராமம்!

சென்னை, டிச.6 - மிக்ஜம் புயலால் சென்னை உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட் டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத் தால் ஒரு கிராமமே துண்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ளது வடகால் கிராமம். இங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கனமழை காரணமாக அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி உப நீர் வெளியேறுகிறது. இங்கு  உள்ள ஓடையில் அதிக  அளவு தண்ணீர் செல்வதால்  தீவு போல் காட்சி அளிக்கி றது. வடகால் கிராமத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற் கும் பணிக்கு வருவதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு ஒன்று ஏற்பாடு செய்தது.
அதன் மூலம் கிராமத்தில்  இருந்து செட்டி புண்ணியம் பகுதிக்கு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த பகுதி யில் மழைநீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிப்ப தால் பொதுமக்கள் வெளி யேறுவது கடினமான சூழல் உள்ளது.

இங்கு உள்ள கிராம  மக்கள் தங்கள் இருசக்கர  வாகனங்களை அங்குள்ள  மலை அருகே நிறுத்தி விட்டு படகு மூலம் ஊருக்கு  செல்கின்றனர். மீண்டும்  ஊரிலிருந்து சிங்கப்பெரு மாள் கோவில் வருவதற்கு படகில் வந்து தங்கள் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.