tamilnadu

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்காதே; ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்துக!

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்காதே; ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்துக! 

சிபிஎம் சென்னை மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தல் 

சென்னை, ஆக.14- சென்னை மாநகராட்சி யில் மண்டல்ம் 5, 6ல் தூய்மைப் பணியை தனியா ருக்கு கொடுப்பதையும் எதிர்த்துள்ள  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒப்பந்த பணி யாளர்கள் அனைவரும் நிரந்தரப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சி யின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம். ராம கிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர். வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா  ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பெருநகர சென்னை மாநகராட்சி இந்தியாவின் பழமையான மாநகராட்சிகளில் ஒன்றாகும். மக்கள் தொகை பெருக பெருக மாநகராட்சியின் எல்லையும் வார்டுகளும் அதிகப்படுத்தப்பட்டன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்  களும் தற்காலிக மற்றும் தொகுப்பூதிய தொழிலாளர்க ளாக பணிக்கு சேர்ந்து பிறகு பணிநிரந்தரம் செய்யப் பட்டனர். அவ்வாறு சென்னை மாநகராட்சி 155 வார்டுகளுடன் 10 மண்டலங்களாக செயல்பட்ட போது அதுவரை இருந்த நடைமுறைக்கு மாறாக 1998ம் ஆண்டு இன்றைய முதல்வர் அவர்கள் சென்னை மாநகராட்சி மேயராக செயல்பட்ட போது மாநகராட்சியில் மூன்று மண்டலங்களில்(3, 9, 10) துப்புரவு பணியை தனி யாருக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். அதை எதிர்த்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்றது. 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு 6, 8, 10 மண்ட லங்களை தனியாருக்கு கொடுத்தனர். அப்போதும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் போராடிய போது அவர்களுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்றது.  பணிநிரந்தரம் செய்க  மேற்படி போராட்டத்தின் போதுதான் 2006 ம் ஆண்டு அப்போதிருந்த தொகுப்பூதிய தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென்று வலி யுறுத்தி சென்னை மாநக ராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு 1600 பேருக்கு பணி நிரந்தர ஆணை தரப்பட்டது. அதன் பிறகு 2008ம் ஆண்டு இதர மண்டலங்களையும் தனி யாருக்கு கொடுக்க முயற்சித்த போது முற்றுகைப் போராட்டம் நடத்தி தனியாருக்கு கொடுப் பதை தடுத்து நிறுத்தியதுடன் 2100 தினக்கூலி தொழிலாளர் களை பணி நிரந்தர ஆணை பெற்றுத் தரப்பட்டது பேச்சுவார்த்தை நடத்துக  2011ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தி 200 வார்டுகள் 15 மண்டலங்களாக மாற்றி னார்கள். 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சைதை துரைசாமி மேயராக இருந்த போது வார்டு வாரியாக கான்ட்ராக்ட் விடுவ தற்கு மாநகராட்சி மன்ற த்தில் தீர்மானம் நிறைவேற்றி னார்கள். அதையெதிர்த்து செங்கொடி சங்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய போது மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி செங்கொடி சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த  முறையை ரத்து செய்து ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின் மூலம் நேரடியாக தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்கி னார். அதையும் ஏற்காமல் செங்கொடி சங்கம் பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென்று தொடர்ந்து போராடிய போது 2016ம் ஆண்டு 54 மணி நேரம் நடத்திய காத்தி ருப்பு போராட்டத்திற்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட மாமன்றம் இல்லாத நேரத்தில் துணை ஆணையர்(சுகாதாரம்) கையெழுத்திட்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் என் யு எல் எம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு அறிவிக்கிற குறைந்தபட்ச சம்பளத்தை தொழிலாளர்களுக்கு வழங்கு வதென்றும் பணி நிரந்தரம் செய்வதற்கு மாநில அரசுக்கு பரிந்துரை செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களும் என்யு எல்எம் திட்டத்தின் மூலம் ஊதியம் பெற்று வந்தனர். ஒப்பந்தம் ஒத்திவைப்பு  2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மண்டலம் 1 முதல் 6 மற்றும் 9 முதல் 15 வரை தனியாருக்கு கொடுக்க டெண்டர்விட முயற்சித்த போது சென்னை மாநகராட்சியைச் சுற்றி மனித சங்கிலியாக நின்று டெண்டர் விடுவதை எதிர்த்து போராடிய போது இரண்டு முறை டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி யில் மேற்படி மண்டலங்களை டெண்டர் விட்டு தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்று 2020 செப்டம்பர் மாதம் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. இவ்வாறு கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுக்க முயற்சித்த போதும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென்றும் சிபிஎம்  தொடர்ந்து போராடி வந்துள்ளது.  தனியார் மயம் கூடாது  தற்போது 5, 6 மண்ட லங்களை தனியாருக்கு கொடுப்பதையும் சிபிஎம் கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது பணிபுரியும் ஒப்பந்த  தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். பணி நிரந்தரம் கேட்டுப் போராடிய தொழிலாளர்களைத் தாக்கிய காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது.  இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.