சென்னை:
தமிழகத்தில் அடுத்து அமையவுள்ளது திமுக ஆட்சிதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள் ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அடுத்து அமையப் போவது நமது ஆட்சி தான். நாம் தான் ஆளப்போகிறோம். அதற்கான தகுதி நமக்கு உள்ளது” என்றார்.திமுக ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டயப்படுத்தி கட்சித் தொடங்க வைத்துள் ளனர் என்றும் அவர் கூறினார்.கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் அதிகார பலம் மற்றும் அதிமுகவின் பணபலம் தேர்தலில் இருக்கும். தேர்தல் எப்போது வந்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் இலக்கு” என்றும் கூறினார்.
ஸ்டாலின் பிரச்சாரம்
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, வரும் 23ஆம் தேதி முதல் தனது நேரடி தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனைதொடர்ந்து, ஜனவரி 10ஆம் தேதிக்குள் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வீடியோ வெளியீடு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் பரப்புரை வீடியோ ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு, நீட் தேர்வால் அனிதா மரணம், பெண் களுக்கு எதிரான வன்முறைகள், சேலம் எட்டு வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, வேலைவாய்ப்பு பிரச்சனை, விவசாயிகள் போராட்டம், ஊழல் மற்றும் லஞ்சம், மொழி திணிப்பு, சிலைகள் அவமதிப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இதற்கு எல்லாவற்றுக்கும் காரணம் தவறான நபர்களுக்கு ஓட்டுப் போடுவது தான் என்றும் ஓட்டு கடமை அல்ல உரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.