சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு
போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு-கைது
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதர வாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறை கைது செய்தது. தொழிற்சங்கம் அமைத்ததற்காக பிப்.4ந் தேதி 3 தொழிலாளிகளை சாம்சங் நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வெளியாட்களை கொண்ட வந்து நிர்வாகம் சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபட்டது. அதனை தடுக்க முயன்றதாக 14 தொழிலாளிகளை பிப்.20ந் தேதி தற்காலிக நீக்கம் செய்துள்ளது. சட்டவிரோத உற்பத்தி தொடர்பாக தொழிலக பாதுகாப்புக் குழு அதிகாரி களிடம் பலமுறை மனு அளித்தும் நட வடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். இதற்கெதிராக தொடர் போராட்டங்களை ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சாம்சங் தொழி லாளர்களுக்கு ஆதரவாக புதனன்று (பிப்.26) தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை யில் உள்ள சாம்சங் ஷோரூம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடிய மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, “தொழிற்சங்கத்தை உடைக்கும் அநாகரிக மான நடவடிக்கையை சாம்சங் நிர்வாகம் கைவிட வேண்டும். சங்க நிர்வாகிகள் மீதான சட்டவிரோத தற்காலிக நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும். சட்டவிரோதமாக உற்பத்தியில் ஒப்பந்த தொழிலாளிகளை ஈடுபடுத்தும் சாம்சங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.