சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் யு.ஜி.சி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல், அதி தீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதியில் புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பேருந்துகள், ரயில் சேவைகள், விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தேசிய தகுதி தேர்வுகள் (நெட்) நடைபெறாது என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.