tamilnadu

img

ரேசன் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு...

சென்னை:
பொங்கல் பரிசை வரிசையில் நின்று நெரிசல் இல்லாமல் பெற்று செல்ல விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண் டிகை பரிசாக ரூ. 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை போன்றவை இதில் அடங்குகிறது. அனைத்து ரேசன் கடைகள் மூலம் ஜனவரி 4ஆம்  தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. ஜன. 4ஆம் தேதி முதல் தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசை வரிசையில் நின்று நெரிசல் இல்லாமல் பெற்று செல்ல விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை அதிகாரிகள் செய்துள்ளனர்.இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 25,589 முழு நேர ரேசன் கடைகள் மற்றும் 9,580 பகுதி நேர கடைகள் மூலம் பொங்கல் பரிசு வினியோகிக்கப்படுகிறது.

தினமும் 200 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.பொங்கல் பரிசு நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று பெற்று செல்ல ஏற்பாடு செய் யப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக் கும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.ரேசன் கடை ஊழியர்கள் ஒவ்வொருவரும் பல லட்சம் ரொக்கப் பணத்தை கையாள் கிறார்கள். ஒரு கடை ஊழியர் தினமும் ரூ. 5 லட்சம் வினியோகிக்கக்கூடும். ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை ஒவ்வொரு ரேசன் கடைகள் மூலமும் வினியோகிக்கப்பட இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அவசியமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

;