tamilnadu

img

குடிநீர், கழிப்பறை வசதிகளை வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சுகாதாரம், சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் தெற்கில் சித்தேரி, விருபாட்சிபுரம்,  விஸ்வநாதன் நகர், காட்பாடி காந்தி நகர் பி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.காசிநாதன், எஸ்.டி.சங்கரி, தாலுகா செயலாளர்கள் சி.எஸ்.மகாலிங்கம், கே.ஜெ.சீனிவாசன், கிளைச் செயலாளர்கள் பி.புண்ணிய மூர்த்தி, எஸ்.செல்வி,சார்லஸ் கே.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.