சென்னை, செப். 26 - ஹால்ஸ் சாலை அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகளை அவசரஅவசரமாக வெளி யேற்றும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி வியாழ னன்று (செப்.26) டி.பி.சத்திரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் பழுத டைந்த அடுக்குமாடி குடியிரு ப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை வாரி யம் கட்டி வருகிறது. டி.பி. சத்திரம் அருகே உள்ள ஹால்ஸ் சாலையில் 84 வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை புதுப் பித்துக் கட்ட, கால அவகாசம் இன்றி மக்களை வலுக்கட்டா யமாக வெளியேற்ற முயற் சித்து வருகிறது. இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் 100வது வட்ட பொறுப்பாளர் த.சுகுமார் தலைமையில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்சி யின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர் கே.மணி கண்டன், பகுதிக்குழு உறுப்பினர் பி.சீனிவாசன், டிபி சத்திரம் கிளைச் செய லாளர் ஆபேல் பாபு உள்ளி ட்டோர் கலந்து கொண்ட னர். இதனைத் தொடர்ந்து கோட்டம்-3ன் நிர்வாக பொறி யாளர் ஜானி சாமுவேலை சந்தித்து, ஜி.செல்வா மனு அளித்தார். அப்போது, “செனாய்நகர் பழைய பேருந்து நிலைய 4 மற்றும் 5 அடுக்கு மாடி வீடுகளை இடித்து நான்கு வருடங்க ளாகியும் கட்டுமானப்பணி முடிக்கப்படவில்லை. நிர்ண யித்த காலக்கெடுவை தாண்டியும் பணி நடக்கிறது. இதனால் 500க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வாடகை கொடுத்து வாழ முடியாமல் தவித்து வருகின்றன. டி.பி. சத்திரம் சுற்று வட்டார பகுதியில் வாடகை மிக அதிகமாக உள்ள நிலை யில், ஹால்ஸ் சாலை குடி யிருப்புகளை இடித்தால் வாடகை மேலும் உயரும். எனவே, போர்க்கால அடிப்ப டையில் செனாய் நகர், பழைய பேருந்து நிலைய அடுக்குமாடி வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதன்பிறகு, போதிய கால அவகாசம் கொடுத்து, ஹால்ஸ் சாலை குடியிருப் புகளை புதுப்பித்து கட்ட வேண்டும்” என்று வலியுறுத் தினர். அதற்கு பதிலளித்த நிர்வாக பொறியாளர், இது குறித்த மனுவை உயர் அதி காரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.