tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வோடு விளையாடுவதா?

சென்னை, டிச.23- தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வர லாறு காணாத மழை - வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடி யாது என்றும், சுமார் ரூ.21 ஆயிரம் கோடி வேண்டும் என தமிழக அரசு  முன்வைத்த கோரிக்கையை அலட்சியமாக தூக்கியெறிந்தும் பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது.

இதுதொடர்பாக சனிக்கிழமை யன்று கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்  துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயல் மற்றும் வர லாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அருகமை மாவட்  டங்களும், தூத்துக்குடி, திரு நெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்க ளும் கடுமையான பாதிப்புக்குள்ளா கியுள்ளன. கடந்த டிசம்பர் 17-18 ஆகிய தேதிகளில் கடந்த 100 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மழைப்  பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் தூத்துக்குடி,  திருநெல்வேலி மாவட்டங்கள் வெள் ளத்தில் மிதந்து கொண்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கு  முன் கண்டிராத சேதம் ஏற்பட்டுள்  ளது. தூத்துக்குடி மாநகர் மற்றும்  ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், ஏரல் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. விவசாயம், குடியிருப்புகள், வியா பார நிறுவனங்கள், கடைகள், மீன வர்கள், சிறு-குறு நிறுவனங்கள், உப்பளங்களில் ஏற்பட்டுள்ள சேதம் கணக்கிட முடியாததாகும். தூத்துக் குடி அனல் மின்நிலையத்தில் மின்  உற்பத்தி முடங்கியுள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி களை தமிழக முதலமைச்சர் மற்றும்  அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி யதுடன் நிவாரணத் தொகையும் அறி வித்துள்ளனர். அரசு அதிகாரிகள், மாநில, தேசிய மீட்பு குழுவினர், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சி யினர், பொதுமக்கள் என அனைத்து பகுதியினரும் இரவு - பகல் பாராமல்  துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தென்  மாவட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டி  வருகின்றனர். தமிழகத்தில் ஏற்பட்ட  பாதிப்புகளை கணக்கிட்டு முதல மைச்சர் பிரதமரிடம் போர்க்கால அடிப்படையில் நிவாரண நிதி யினை அளித்திட நேரில் சந்தித்து வற்புறுத்தியுள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமலும், அவர்க ளுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்த துடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன் உண்மைக்கு மாறான விஷ யங்களை புதுதில்லியில் செய்தி யாளர்களிடம் அள்ளி வீசியுள்ளார். நிவாரண நிதி வழங்க மறுத்துள் ளார். அரசியல் பழிவாங்கும் நோக்  கத்தோடு கருத்து தெரிவித்துள் ளார். தற்போது வரை தமிழ கத்தைச் சார்ந்த இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தலைகாட்டவில்லை. ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூட  வரவில்லை என்பதற்கு விளக்கம ளிக்கவில்லை. நிதியமைச்சரின் இத்தகையப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

மக்கள் பரிதவிக்கும் நேரத்தில் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி பாதுகாக்க வேண்டிய உணர்வு கிஞ்சிற்றும் இன்றி ஒன்றிய அரசு மக்களை தவிக்கவிட்டிருப்பதை ஒரு போதும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய விவாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு உடனடியாக தமி ழக அரசு வற்புறுத்தியுள்ள ரூ. 21  ஆயிரம் கோடி நிதியினை வழங்கிட  முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை இருப்பினும் தமி ழக அரசு போர்க்கால அடிப்படை யில் மக்களை பாதுகாக்க மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. இதனை மேலும்  தீவிரமாக தொடர வேண்டுமென வும் மக்களுக்கு முழுமையான பாதிப்புகளை ஈடு செய்யும் வகை யில் நிவாரணங்களை வழங்கிட வேண்டுமெனவும், உயிரிழந்து சுகா தார கேடுகளை ஏற்படுத்தும் கால்  நடை பிரேதங்களை அப்புறப்படுத்த வும், சுகாதார பணிகளை தீவிரப் படுத்தவும், மருத்துவ முகாம்களை ஒவ்வொரு கிராமத்திலும், வார்டி லும் ஏற்படுத்தவும் தேவையானால் தமிழகம் முழுவதிலுமிருந்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணி யாளர்களை அனுப்பி மேற்கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பாதிக்கப்பட்ட இடங்க ளில் டிசம்பர் 21, 22 தேதிகளில் நேரில் சென்று பார்வையிட்டதுடன் நூற்றுக்கணக்கான கட்சி ஊழி யர்கள் மக்களை பாதுகாக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளதுடன், சுகாதாரப்  பணி, மருத்துவ முகாம்களை  நடத்துவதற்கும் மேற்கொண்டுள் ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேரளம் வழிகாட்டுகிறது
அண்டை மாநிலமான கேரளா வில் தோழர் பினராயி விஜயன் தலை மையிலான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசு வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவும் வகையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மிளகாய் தூள், உடை என 18 பொருட்கள் அடங்கிய பை வழங்கிட தீர்மா னிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால்,  ஒன்றிய பாஜக அரசோ தமிழகத்  திற்கு உரிய நிதியை ஒதுக்கிடு வதற்கு பதிலாக அரசியல் காழ்ப்பு ணர்ச்சியுடனும், பாராமுகத்துடன் செயல்படுவதை தமிழக மக்கள்  அறிவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.