யோகோஹமா, பிப்.18- ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டது. இந்த கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள். அவர்களில் 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப் பட்டது. கப்பலில் இருந்தவர்களில் 1,219 பேருக்கு நடந்தபரிசோதனை யின் முடிவில், கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை, வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. தொடர்ந்து 681 பேரி டம் நடந்த பரிசோதனையில் மேலும் 88 பேருக்கு புதிய வைரஸ் பாதிப்புள்ளது செவ்வாயன்று கண்டறியப்பட்டுள்ளது.