tamilnadu

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் பலி பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை, மே 18- ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வர் ராமையா புகலா (21). இவர்  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூர் அடுத்த தனியார் பொறியி யல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதி யில் தங்கி இருந்த ராமையா புகலா, ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.

இதற்காக தன்னுடன் தங்கி இருந்த சக மாணவர்களிடம் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கி ஆன் லைன் சூதாட்டத்தில் இழந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ராமையா புகலா, விடுதி யில் உள்ள ஒரு அறையில் தூக்குப்  போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்  திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீ சார் ராமையா புகலா உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். ஆன்லைன் சூதாட்  டத்தில் பணத்தை இழந்த மாண வர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த  ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத் திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்  தில் மேல்முறையீடு செய்தது. இது வரை அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இத்தகைய பின்னணியில் தமிழ்நாட் டில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள் வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

;