tamilnadu

img

சென்னை: கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்ற இளைஞரிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் அம்மாணவியை தள்ளிவிட்டுள்ளார். இதில் மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சதீஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். 
தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தப்பி ஓடிய சதீஷை பிடிக்க போலீசார் 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.