tamilnadu

img

அனைத்து சங்கங்களையும் இணைக்கும் பாலமாக சிஐடியு வி.பி.சி ஜோதி பயணத்தை துவக்கிவைத்து வே.மீனாட்சி சுந்தரம் பேச்சு

சென்னை, ஜன. 19- சிஐடியு அகில இந்திய மாநாடு  ஜனவரி  23-27தேதிகளில் சென்னை நந்த னத்தில் நடைபெறவுள்ளதையொட்டி வடசென்னை சிஐடியு மாவட்டக்குழு சார்பில் தோழர் . விபிசி நினைவு ஜோதி  ஞாயிறன்று (ஜன19) திருவொற்றியூரி லிருந்து துவங்கியது. ஜன.19 தியாகிகள் தினத்தை யொட்டி சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன் தலைமையில் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற  ஜோதி பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம் துவக்கி வைத்தார். நினைவு ஜோதியை அவர் எடுத்துக்கொடுக்க சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை பெற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மீனாட்சி சுந்தரம் தொழிலாளர்கள், ஆலைகள் நிரம்பிய வடசென்னை தற்போது விரிந்திருந்தாலும் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகச் சுருங்கி விட்டது. ஆலை முதலாளிகளின் லாபப்ப சிக்காக அனைத்தும் ஒப்பந்த தொழி லாக மாறிவிட்டது. முதலாளிகளை எதிர்த்து போராட்டம் நடத்திய காலம்  மாறிவிட்டது. இனி அந்த முதலாளி களைக் காப்பாற்றும் அரசை எதிர்த்து  போராட்டம் நடத்த வேண்டிய கட்டா யம் வந்துவிட்டது. தொழிலாளர்கள் சங்க பேதமின்றி ஒற்றுமையோடு  போரா டாவிட்டால் சென்னை நகரம், நரகமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.  போரா டிப்பெற்ற தொழிற்சங்க உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வரு கின்றன.  இந்நிலையில் பன்னாட்டு முதலாளி களால் தான் உற்பத்தி பெருகும் என இந்தியப் பிரதமர் மோடி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  இந்த அநியாயத்தை மாற்றக்கூடிய ஒரே சக்தி தொழிலாளர் வர்க்கம் தான். சிஐடியு  அதனை முனைப்போடு செய்கிறது.  சிஐடியு சங்கம் ஐஎன்டியுசி, ஏஐடியுசி  உள்ளிட்ட சங்கங்களுக்கு போட்டி  சங்கம் அல்ல. மாறாகத் தொழிலாளர்க ளின் நலன்களை பாதுகாக்க  அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.   வடசென்னையில் எம்ஆர்எப்  தொழி லாளர்களின் முதல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி சிறைசென்றவர்கள் தோழர்கள் வி.பி.சிந்தன், அரிபட், பி.ஆர்.பரமேஸ்வரன் ஆகியோர் தான். அதே போல் சிம்சனின் நடைபெற்ற போராட்டத்தையும் தொழிலாளர் வர்க்கத்தின் துணையோடு வெற்றி பெற்றோம். தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கும் சிஐடியுவின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.  தொழிலாளர்களின் ஒற்றுமையும், உழைப்பு சக்தியையும் கொண்டு  மக்களின் மனங்களை வென்றெடுப் போம். சிஐடியு அகில இந்திய 16வது மாநாட்டை வெற்றி பெறச்செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் விஜயன், திருவொற்றியூர் பொதுத்தொழிலாளர் சங்கம் தலைவர் ஆர்.ஜெயராமன், பொதுச்செயலாளர் கே.ஆர்.முத்துசாமி உள்ளிட்ட பலர் இதில் பேசினர்.                                                                                                                            வழியெங்கும் வரவேற்பு 
எம்.கே.பி. நகர்
வி.பி.சிந்தன் நினைவு ஜோதிக்கு எம்கேபி நகரில் பெரம்பூர் பகுதி சிஐடியு  அமைப்புசாரா, கட்டுமானம், தையல்  சங்கங்கள் சார்பில் ஜாகிர் உசேன்  தலைமையில் வரவேற்பு அளிக்கப்  பட்டது. வடசென்னை மாவட்டச்செய லாளர் சி.திருவேட்டை சிறப்புரை யாற்றினார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட துணைத் தலைவர் பி.என்.உண்ணி  தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இதில் மாவட்டப் பொருளாளர் வி.குப்புசாமி, துணைச் செயலாளர் மணிமேகலை, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.விஜயன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், செங்கொடி சங்க பொதுச் செயலாளர் சீனிவாசலு, ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனி யன் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச்  செயலாளர் பா.ராஜாராம், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சு.பால் சாமி, அ.வே.மனோகரன் (ஆட்டோ சங்கம்), குமரவேலு (மாநகர போக்கு வரத்து ஊழியர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆவடி பணிமனை
ஆவடி பணிமனையில் சென்னை  பெருநகர தையல் சங்க செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் வரவேற் பளிக்கப்பட்டது. இதில் சிஐடியு வட சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், மகாதேவன் (போக்கு வரத்து), கங்காதரன், சடையன் (கட்டு மானம்), சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ம.பூபாலன், ஆர்.ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநின்றவூர்
திருநின்றவூரில் கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ராபர்ட் எபிநேசர் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் பூந்தமல்லி வட்டார பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ராமசாமி, சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாமரைப்பாக்கம்
தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி ரமேஷ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் ஊத்துக் கோட்டை பொது தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஆட்டோ சங்க தலை வர் சங்கரதாஸ் தலைமையில் வர வேற்பளிக்கப்பட்டது. இதில் திரு வள்ளூர் சுற்றுவட்டார பொதுத் தொழி லாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருத்தணி
திருத்தணியில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் கரிமுல்லா தலை மையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் பொதுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சுமதி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயணக்குழு சென்ற இடங்களில் எல்லாம் வான வேடிக்கையுடன், மேள தாளங்கள் முழங்க வரவேற்பளிக் கப்பட்டது. முதல் நாள் பயணம் திருத்தணியில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது.

;