tamilnadu

img

கலைஞர் நூற்றாண்டு நாணயம்

சென்னை, ஆக.18- தமிழ்நாடு முன்னாள் முதலமைச் சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி, அவரது உருவப் படத்து டன் கூடிய 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி யிருந்தது. இதை பரிசீலித்த ஒன்றிய அரசு, ஒப்புதல் வழங்கியது. இதை யடுத்து, அவரது உருவத்துடன் ‘தமிழ் வெல்லும்’ என  அவரது கையெழுத்தில் பொறிக்கப்பட்ட நாணயம் தயாரானது.

வெளியீட்டு விழா

கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 18) மாலை 6.50 மணியளவில் நடை பெற்றது. 

இந்த விழாவில் கலந்து கொள்ள ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். அவரை டி.ஆர்.பாலு, கனிமொழி, தங்கம் தென்னரசு ஆகியோர் விமான நிலை யத்தில் அமைச்சர்கள் வரவேற்ற னர். மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்திய ராஜ்நாத்  சிங், நினைவகத்தை சுற்றிப்பார்த் தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, நடை பெற்ற விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனை வரையும் வரவேற்றார். கலைஞர் குறித்து சிறப்பு காணொலி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை ஒன்றிய அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங்  வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு விழா பேருரையாற்றினார்.

தலைவர்கள் பங்கேற்பு

இந்த விழாவில், ஒன்றிய இணை  அமைச்சர் எல்.முருகன், சட்டப்பேர வைத் தலைவர் மு.அப்பாவு தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ  மாநில செயலாளர் இரா.முத்தரசன், தி.க. தலைவர் கி.வீரமணி, காங்கி ரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மதிமுக, விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு கட்சிகளின் தலை வர்கள், இந்து என். ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முதல்வர் நன்றி!

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி பிரதமர் அனுப்பிய வாழ்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

அதேபோல், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு விழாவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.