tamilnadu

img

சென்னை: ஜன.1 முதல் குப்பை சேகரிக்க கட்டணம்

சென்னையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் குப்பைகளை சேகரிக்க கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதன்படி, வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும், அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையும், உணவகங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதே போல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ.3000 வரையிலும் குப்பைகளை சேகரிக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.