கர்நாடகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் கர்நாடக விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு நடைபெறவுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்று நள்ளிரவு முதல் நாளை (செ.29) நள்ளிரவு வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருமாநில எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலையைப் பொருத்து பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.