tamilnadu

img

சத்துணவு திட்டத்தை ஏற்று நடத்தும் ‘அட்சயப் பாத்திரா’வில் மாபெரும் ஊழல்? செலவுத் தொகையில் மோசடி; தடுக்க முடியாததால் அறக்கட்டளை உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா?

பெங்களூரு:
கடந்த 2000-ஆவது ஆண்டில் நவம்பர் 13 அன்று பெங்களூருவில் துவங்கப்பட்ட நிறுவனம்தான் ‘அட்சயப் பாத்திரா’ (Akshaya Patra Foundation -APF) எனப்படும் தனியார் அறக்கட்டளை ஆகும்.

நாடு முழுவதும் உள்ள ‘இஸ்கான்’ (ISKCON) எனப்படும் ‘கிருஷ்ணா கான்சியஸ்னஸ் இன்டர்நேஷனல் சொசைட்டி’ கோயில்கள் மற்றும் அதையொட்டி 10 கி.மீ.சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்குவதற்காக பொது - தனியார்கூட்டாண்மை அடிப்படையில் துவங்கப்பட்டநிறுவனம்.ஆனால் கொஞ்ச காலத்திலேயே, மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தையும் தனியார் - அரசு பங்களிப்பில் அமல் படுத்துவதற்கான முன்னணி நிறுவனமாக இந்த ‘அட்சயப் பாத்திரா’ மாறியது.

தற்போது இந்நிறுவனம் 12 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 39 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 18 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் அளவிற்குவளர்ந்து நிற்கிறது.இவ்வாறு மதிய உணவு வழங்குவதற் காக, கடந்த 2019-20ஆம் ஆண்டில் மட்டும் ‘அட்சயப் பாத்திரா அறக்கட்டளை’ ரூ. 248 கோடியை அரசிடமிருந்து மானியமாகவும், ரூ. 352 கோடியை தனியார்களிடம் இருந்து நன்கொடைகளாகவும் பெற்றிருக்கிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிறுவனமாக மாறுவோம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இந்நிலையில்தான், ‘அட்சயப் பாத்திரா’வில் ஆரம்ப காலம் முதல் சுயேச்சையான அறங்காவலர்களாக இருந்த முன்னாள் ‘இன்ஃபோசிஸ்’ இயக்குநர் மோகன்தாஸ் பய், அபய் ஜெயின், வி. பால கிருஷ்ணன்,ராஜ் கொண்டூர் ஆகியோர் திடீரென தங்களின் அறங்காவலர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறியுள்ளனர்.தங்களின் இந்த பதவி விலகலுக்கு, அட்சயப் பாத்திரா அறக்கட்டளை நிர்வாகத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், மோசமானநிர்வாகம் ஆகியவையே காரணம் என்றுமோகன்தாஸ் பய் உள்ளிட்டோர் பகிரங்கமாககுற்றம் சாட்டியுள்ளனர். இது தற்போது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.இதே காலக்கட்டத்தில், ‘அட்சயப் பாத்திரா’ நிறுவனம் தொடர்பான 7 பக்க தணிக்கை அறிக்கையும்- ராஜினாமா செய்த 4 அறங்காவலர்கள் கூறிய அதே குற்றச்சாட்டுகளை விரிவான முறையில் எடுத்து வைத் துள்ளது.குறிப்பாக, ‘அட்சயப் பாத்திரா’ அறக்கட்டளை வழங்கும் உணவுக்கான செலவு, பிறநிறுவனங்கள் வழங்கும் அதே போன்ற உணவுக்கான செலவை விட அதிகமாக இருக்கிறது என்ற முக்கியமான குற்றச்சாட்டுஅறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அறக்கட்டளை செலவுகளில் நிதி ஒழுங்கு இல்லை. அறக்கட்டளையின் பல்வேறு விஷயங்கள் தணிக்கை முறைக்கு உட்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை கூறியுள்ளது.

‘ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை’, ‘இஸ்கான் பெங்களூரு’, ‘டச்ஸ்டோன் அறக்கட்டளை’ போன்ற கோயில் அறக்கட்டளைகளைச் சேர்ந்த முக்கியமான நிர்வாகிகளே, ‘அட்சயப் பாத்திரா’ அறக்கட்டளையில் முக்கிய பொறுப்புகளை கைப்பற்றிக் கொண்டுள்ளனர். இது அறக்கட்டளையில் தீவிரமான முரண்களை ஏற்படுத்தியுள்ளது.“அட்சயப் பாத்திரா அறக்கட்டளையின் தலைவர் மது பண்டிட் தாசா உள்ளிட்டோர் கோயில் அறக்கட்டளைகளிலும் அறங்காவலர்களாக இருப்பது தீவிரமான ஐயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் இந்த குற்றச்சாட் டிலிருந்து ஒதுங்கியிருக்க முன்வராதது, இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதையும், தீர்வு காண்பதையும் தடுக்கிறது” எனவும் தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
‘அட்சயப் பாத்திரா’ அறக்கட்டளையின் செயல்பாடுகள் ஆரம்பம் முதலே விமர் சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்த அறக்கட்டளை நிறுவனம், சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவில் முட்டை வழங்க முடியாது என்று மறுத்ததும்,உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்க மாட்டோம் என்று கூறிவிட்டதும் கடும் சர்ச்சையைஏற்படுத்தியது.ஊட்டச்சத்து அறிவியலுக்கு எதிரான இந்த நடவடிக்கை ‘உயர்-சாதியினரின் உணவு மேட்டிமை சார்ந்த அரசியலை மாணவர்கள் மத்தியில் திணிப்பதாக குற்றச்சாட் டுக்களும் எழுந்தன. எனினும் அதிகார வர்க்கத்தின் தயவால் இப்பிரச்சனைகளை அட்சய பாத்திரா சாமர்த்தியமாக கடந்தது. இந்நிலையில்தான், அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நான்குபேரே பகிரங்கமாக ‘அட்சய பாத்திரா’வில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளனர். தணிக்கை அறிக்கையும் அதனை அம்பலப்படுத்தியுள்ளது.

;