tamilnadu

img

கன மழையால் விமானநிலையத்தில் விமானம் புறப்பாடு, வருகை பாதிப்பு

சென்னை, ஜூன் 7- சென்னை புறநகரில் வியாழக்கிழமை இரவில் தொடங்கி, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை, தொடர்ந்து பெய்த மழை  மற்றும் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றால், சென்னை விமான நிலையத்தில் 17  விமானங்களின் வருகை,   புறப்படும் 18   விமானங்கள் என மொத்தம் 35 விமான சேவை கள்  தாமதமானது. இதனால்  பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இடி  மின்னல் சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஹைதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் சென்னையில் தரை யிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.

அதன் பின்பு இடி  மின்னல் சூறைக்காற்று ஓயும் போது, சென்னை விமான நிலையத்தில் தரை யிறங்கின.  அதேபோல் சென்னையில் இருந்து  புறப்பட வேண்டிய அபுதாபி, துபாய்,  கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி, மும்பை,  கொச்சி, கண்ணூர், திருவனந்தபுரம், கோழிக் கோடு, இந்தூர்,உட்பட 18 விமானங்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரை தாமத மாக புறப்பட்டுச் சென்றன.  

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இடி மின்னல் சூறைக்காற்று இல்லாமல், எவ்வளவு கன மழை பெய்தாலும், விமான  சேவைகளை  பாதிக்கப்படாமல், வழக்கம் போல் இயக்க முடியும். ஆனால் அதிக  அளவில் இடி மின்னல் மற்றும் சூறைக் காற்று இருந்ததால், பாதுகாப்பு காரணமாக, விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.  இந்த தாமதத்துக்கு  இடி மின்னல் தான் முக்கிய காரணம்.

ஆனால் ஓடுபாதையில் தண்ணீர் போன்ற பாதிப்புகள் எதுவும், சென்னை விமான நிலையத்தில் ஏற்பட வில்லை என்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்க ளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும். 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில் அடுத்த 24 மணி நேரத் திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதி களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி  செல்சி யஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.