கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 18 மாதங்கள் கடந்தா லும், அரசு நிர்வாகம் கட்டமைப்பு வசதி களையும், மக்கள் நலன், மற்றும் அடிப் படை வசதிகளை சிறிதும் செய்து கொடுக் கப்படவில்லை. ஒகேனக்கல் செல்லும் பெங்களூர்-ஓசூர் பகுதியினர் அனைவரும் வாகனங்க ளில் அஞ்செட்டி வழியே தான் செல்ல வேண்டும். ஆனால் அஞ்செட்டி வட்டமாக பிரிக்கப்பட்டும் பேருந்து நிலையம் அமைக் கப்படாததால் மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தார்ச் சாலை யிலேயே நிற்கின்றனர். உரிகம் சாலையில் ஊரின் கடைசியில் உள்ள தேவகவுண்டன் தொட்டியில் உள்ள 150 வீடுகளுக்கு 40 ஆண்டுகளாய் பட்டா கேட்டும் கிடைத்தபாடில்லை. இதே சாலை யில் பி.ராசிபுரத்தில் அருகருகே அங்கும் இங்குமாய் 80 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு மயானம் இல்லாததால் இறந்தவர்களை சாலையோரமும், கண்ட இடங்களிலும் புதைத்து வருகின்றனர். சில நேரங்களில் இங்கு புதைக்கக் கூடாது என தடுப்பது கூட நடந்து பலர் தவிப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மயா னத்திற்கு ஒதுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கட்சி சார்பிலும் பல பேராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தில் அஞ்செட்டி பகுதியில் சிறு சிறு கிராமங்களையொட்டி மலை வாழ் பழங்குடி, தலித் மக்களுக்கு 450-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. கடந்த பத்து ஆண்டு களாகவே இந்த வீடுகள் அனைத்துமே இடிந்து சீர்கெட்டு வாழ தகுதியற்றதாக உள்ளது. ஆறு மாதத்திற்கு முன்பு கூட மழையால் ஒரு தொகுப்பு வீடு இடிந்து விழுந்து ஒரு குழந்தை இறந்த சம்பவம் நடைபெற்றது. எருமத்தனப்பள்ளி அருகே மாஸ்திநக ரம் என அரசு அப்போது கட்டித்தந்த பத்து தொகுப்பு வீடுகள் மேற்கூறைகள், பக்கச் சுவர்கள் இடிந்து விழுவதற்கும், உயிர் பலி வாங்கவும் காத்துக் கொண்டிருக்கி றது. இந்த மாஸ்த்தி நகருக்கு ஒற்றையடிப் பாதை கூட இல்லை குடிநீர், தெருவிளக்கு வசதி இல்லை. அடுத்தவர் நிலத்தில் வரப்பின் மீது தான் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. எனவே அஞ்செட்டியில் பேருந்து நிலை யம் அமைக்க வேண்டும், தேவன கவுண்டன் தொட்டி, ராசிபுரம், குடியிருப்பு களுக்கு பட்டா வழங்க வேண்டும், மயா னத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், பிரகாஷ் ஆகியோர் வட்டாட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர். -ஒய்.சந்திரன்