tamilnadu

img

‘தமிழ்நாட்டிற்குரிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்க!’

கோயம்புத்தூர், ஜூலை 7- எதிர்வரும் ஒன்றிய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் உள்பட தமிழ்நாட்டி ற்குரிய அனைத்து திட்டங்களுக்கும் முழு மையாக நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலி யுறுத்தினார்.

கோயம்புத்தூரில் ஞாயிறன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா  இலச்சினை வெளியீட்டு விழா நடை பெற்றது. இதில் பங்கேற்ற சு.வெங்கடேசன் எம்.பி., முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்ட அம்சங்கள் வருமாறு:

எதிர்க்கட்சியின் குரல், ஜனநாய கத்தின் குரல், சட்ட மரபுகள் காப்பாற்றப் பட வேண்டும். ஆனால், பாஜகவால் தொடர்ந்து அவை சிதைக்கப்பட்டு வரு கின்றன. அதில் ஒன்றான 3 புதிய குற்றவியல் சட்டங்கள். அதில் நீதி மன்றத்தின் குரலோ, வழக்கறிஞர்கள் குரலோ, மக்களின் குரலோ கேட்கப் படவில்லை. நாடாளுமன்றத்தில்  140க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த  விவாதம் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றி லும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வேண்டும் என்று நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்கள் முன்பும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர்.

5 இல் ஒரு பங்கு

மதுரையிலிருந்து கோவைக்கு பகல் நேரத்திலான புதிய ரயில்கள் இயக்கப் படவில்லை. அகல ரயில் பாதை  உருவாக்கப்பட்ட பின்பும் 10 ஆண்டு களாக ரயில்கள் இயக்கப்படவில்லை. ரயில் பாதைகள், நான்கு வழிச்சாலை பணிகள் என எதுவாக இருந்தாலும், வட மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக மிக பின்தங்கிய மாநிலங்களாக தென் மாநி லங்கள் - குறிப்பாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய வட மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு வழிச்சாலைகளுக்கு ஒதுக்கப் பட்ட முதலீடுகளில் 5 இல் ஒரு பங்கு தான் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பாக்கிகள் நேர் செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டி ற்கான  முதலீடுகள் அனைத்து வகைகளி லும் குறிப்பாக ரயில் சேவை, கட்டுமான துறையில் அதிகரிக்க வேண்டும்.

கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக நட்டா இருந்தபோது, மது ரைக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. அதன் பின் பாஜகவின் தலைவராகி முழு  பொறுப்பை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராகி யுள்ளார். அவர் எந்த புள்ளியில் ஆரம்பித்தாரோ அதே புள்ளியில் தான்  எய்ம்ஸ் பணிகள் உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையிலாவது முழு நிதி ஒதுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு முழுமையான நிதியை  வரும் பட்ஜெட்டிலேயே ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட வேண்டும். செல்வ வரி அதிகரிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் கொள் கைகளை, குறிப்பாக வணிகர்களை பாதிக்கும் ஜிஎஸ்டி என்ற பெயரில் நிகழ்ந்து கொண்டிருக்கிற வரி பயங்கர வாதத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார்.