tamilnadu

img

மோர்தானாவில் பயிர்களை சேதப்படுத்திய யானை கூட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானாவில் விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. தமிழக எல்லையையொட்டி ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.அச்சமயம் விவசாயிகள், கிராம மக்கள் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து, ஒலி எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்த நிலையில் வியாழன் இரவு (பிப் 20) ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வந்த 5 யானைகள் குடியாத்தம் அடுத்த மோர்தானா ஊராட்சி ராகிமானபள்ளி கிராம பகுதி யில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.இதில் என்ஆர்வி.பாபு, முரளி, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், நட ராஜன், ரமேஷ், கோபி, கலாவதி உள்ளிட்ட விவ சாயிகளின் நிலங்களில் புகுந்த யானைகள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை சேதப்படுத்திய துடன், விளை நிலங்க ளில் இருந்த பைப் லைன், தென்னை மரங்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்தின. தொடர்ந்து யானைகள் கூட்டம் பிளிறியபடி இருந்ததால் அக்கிராம மக்கள் இரவு முழுவதும் அச்சத்துடனேயே இருந்தனர். தகவல் அறிந்து வெள்ளியன்று காலை (பிப் 21) குடியாத்தம் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு பயிர் சேதங்கள் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், வெயில் காலம் தொடங்க உள்ளதால் ஆந்திர மாநிலத்தில் இருந்து யானைகள் கூட்டம் இனி அடிக்கடி வந்து பயிர்களை சேதப்படுத்தும்.  எனவே யானைகள் கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்ட வேலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வன ஊழியர்களை நியமிக்க வேண்டும். சேத மடைந்த பயிர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.