tamilnadu

img

கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

கோவை, ஜூலை 5- கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 கட்டு மான தொழிலாளர்கள் பலியான விவ காரத்தில் கட்டுமான நிறுவன உரிமை யாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, குனியமுத்தூர் சுகுணா புரம் பகுதியில் கிருஷ்ணா கலை மற்  றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனியார் கல்லூரியான இந்த வளாகத்தில் உள்ள விடுதி அருகே சுற்றுச்சுவர் கட்டும் பணி நடை பெற்று வந்தது. செவ்வாயன்று மாலை  5 மணியளவில் பழைய கருங்கல்லால்  ஆன சுவரை ஒட்டி புதிய சுவர் எழுப்பு வதற்காக ஆழமாக அஸ்திவாரம் தோண்  டப்பட்டது. அப்போது திடீரென பழைய கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து  விழுந்தது. இதில் 5 கட்டுமான தொழி லாளர்கள் கற்களின் இடிபாடுகளில் சிக்கி படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.  சம்பவத்தையறிந்து, குனிய முத்தூர் உதவி ஆணையர் ரகுபதி ராஜா உள்ளிட்ட போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இடிபாடுகளில் சிக்கி ஆந்திர மாநிலம்,  விஜயநகரத்தை சேர்ந்த ரபாகா கண்ணையா (49), கொலி ஜெகநாதன்  (35), அவரது அண்ணன் நகேலா சத்யம்  (37), மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த பிஸ்கோஷ் (20) ஆகிய 4 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல் லப்பட்டது.

மேலும் படுகாயமடைந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பருன்  கோஷ் (28), கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கட்டுமான பணியில் ஈடுபட  ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தைச்  சேர்ந்த 8 பேர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்புதான் கோவை வந்துள்ள னர். அவர்கள் கோவைப்புதூரில் தங்கி யிருந்து வேலை பார்த்து வந்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  மாநகராட்சி மேயர் கல்பனா, மாநக ராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்  வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விவ காரம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன்,  குனியமுத்தூர் ஹீரா நகரை சேர்ந்த  மேலாளர் சாதிக் குல்அமீர் (40) மற்றும் கட்டுமான நிறுவன பொறியாளர் அன்னூர் பட்டகாரன்புதூரை சேர்ந்த அருணாச்சலம் (40) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது உரிய பாதுகாப்பு உப கரணங்கள் இன்றி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தல் உள்ளிட்ட இரு  பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்  பட்டுள்ளது.  ரூ.52 லட்சம் நிவாரணம் இதனிடையே, கல்லூரி நிர்வா கம் மற்றும் கட்டுமான ஒப்ந்த தாரர்கள் சார்பில் ரூ15 லட்சம், இன்சூ ரன்ஸ் தொகை ரூ.32 லட்சம் மற்றும்  தமிழக அரசின் கட்டுமான வாரி யத்தின் சார்பில் ரூ.5 லட்சம் என  இந்த விபத்தில் பலியான குடும்பத் திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

ரூ.52 லட்சம் நிவாரணம்

இதனிடையே, கல்லூரி நிர்வா கம் மற்றும் கட்டுமான ஒப்ந்த தாரர்கள் சார்பில் ரூ15 லட்சம், இன்சூ ரன்ஸ் தொகை ரூ.32 லட்சம் மற்றும்  தமிழக அரசின் கட்டுமான வாரி யத்தின் சார்பில் ரூ.5 லட்சம் என  இந்த விபத்தில் பலியான குடும்பத் திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.
 

;