tamilnadu

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 319 அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை, மே 18 - தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319  ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. 

நாடு முழுக்க கிராமப்புற  ஏழை விவசாய தொழிலாளர் களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இடதுசாரிகளின் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வலியுறுத்தல் மற்றும் நீண்ட நெடிய போராட்டத் திற்குப் பிறகு ஊரக உள்ளாட்சி  அமைப்புகளில் வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100  நாள் வேலை திட்டம் அமல் படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கிரா மப்புற ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் 2014-இல் அதிகாரத்திற்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, இந்தத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் நட வடிக்கையில் ஈடுபட்டு வரு கிறது. இதைக் கண்டித்தும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்; பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்; கூலியை உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கமும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. 

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 100 நாள்  வேலைத் திட்டம் 150 நாட் களுக்கு விரிவுபடுத்தப்படும்; கூலி உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

அதன்படி நாளொன்று க்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்தது. தற்போது அதற்கான அரசா ணையையும் வெளியிட்டுள் ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் விவசாய கூலித் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

;