சேலம், மே 30-சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா வியாழனன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மலர்கண்காட்சியும் இடம்பெறுகிறது. இதற்காக அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூச்செடிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கோடை விழா காரணமாக ஏற்காடு மலைப்பாதை, ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து ஏற்காடு செல்பவர்கள் கொண்டப்ப நாய்க்கன்பட்டி வழியையும், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்பவர்கள் குப்பனூர் வழியையும் பயன்படுத்த காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.