தூத்துக்குடி, செப்.21- விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் இளம் பெண்ணை பாலியல் பலாத் காரம் செய்ய முயன்றதாக 4 வாலிபர்கள் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய் யப்பட்டனர். தூத்துக்குடி மாவட் டம், விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குச் செவல் கிரா மத்தைச் சேர்ந்த பால்வேல் மகன் சுரேஷ்குமார் (19). இவ ரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் ராமலிங்கம் (21), பால்ராஜ் மகன் அழகுராஜா (19), கன்னி ராஜபுரம் வாழைவெட்டி மகன் ராமசந்திரன் (22) சுரேஷ்குமார் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் அந்த பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வரவே மகளை கண்டித் துள்ளனர். இனி வேலைக்குச் செல்லவேண்டாம் என்று கூறி தடைபோட்டு, அவரை வீட்டிலேயே வைத்தி ருந்தனர். இந்நிலையில் ராமலிங்கம், சுரேஷின் காதலியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி அவரை விளாத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். காட்டுப்பகுதியில் அவர்கள் பேசிக் கொண்டி ருந்தபோது, திடீரென அந்த இளம்பெண்ணை சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அப்பெண் ஓடிச்சென்றபோது மயக்கம் அடைந்தார். காட்டுப்பகுதி யில் இளைஞர்கள் ஓடிச்சென் றதை பார்த்த, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு தக வல் தெரிவித்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் தப்பியோடிய சுரேஷ்குமார், உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.