tamilnadu

img

திருச்செங்கோடு நகர, ஒன்றிய குழுக்கள் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

தீக்கதிர் நாளிதழின் சந்தா சேர்ப்பு சேர்ப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர, ஒன்றிய குழுக்கள் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், ஆண்டு சந்தா 15, ஆறு மாத சந்தா 6 என சந்தா தொகையாக ரூ.36,300ஐ கோவை பதிப்பின் மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கத்திடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஆதி நாராயணன், ஒன்றிய செயலாளர் ஆர்.மனோகரன், நகர செயலாளர் ஐ.ராயப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலாயுதம், ஒன்றி யக்குழு உறுப்பினர் பி.பிரபாகரன், ஆண்டிபாளையம் கிளைச் செயலாளர் ஏ.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;