tamilnadu

img

சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து சாய்னா நேவால் வெளியேறினார்.


சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. அதில் ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனை யான்யான்காய் எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. விறுவிறுப்பாக சுமார் ஒரு மணிநேரம் நடந்த போட்டியில் 21-13, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதியினுள் நுழைந்தார். இவர் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுகராவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.


இதற்கு முன்பு நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுகராவிடம் 21-8 மற்றும் 21-13 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியுற்று இரண்டாவது சுற்றிலிருந்து வெளியேறினார்.