tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

திருப்பூர், ஜூலை 5 - திருப்பூர் மணியகாரம்பாளையம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர் பற்றி தீக்கதிர் நாளிதழில் வெள்ளி யன்று படத்துடன் செய்தி வெளியிடப் பட்டிருந்தது. நீண்ட காலமாக மாநக ராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அப்பகுதி மக்களின் போக்கு வரத்துக்கும், சுகாதாரத்துக்கும் பாதிப்பு  ஏற்படுத்தி வருவது பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது. தீக்கதிர் செய்தியின் எதி ரொலியாக வெள்ளியன்று மாநகராட்சி கழிவுநீரேற்ற லாரியைக் கொண்டு வந்து  அந்த இடத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து பாதையில் தேங்கியிருந்த கழிவுநீர் குட்டையையும் அகற்றினர்.