tamilnadu

குழந்தையின் சிகிச்சைக்கு பணமில்லாததால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

கோவை, டிச. 12 –  நுரையீரல் பாதிப்பால் அவ தியுறும் குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய் மற்றும் நான்கு குழந்தைகள் அரளி விதையை அரைத்து குடித்து தற் கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40) மற்றும் அம்சவேணி (37)  தம்பதியினர், கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சௌ மியா (16), சத்யபிரியா (11) என்ற  மகள்களும், மணிகண்டன் (10), சபரிநாதன் (7) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சத்ய பிரியா கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் பாதிப்பினால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இவ ருக்கு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. தொடர்ந்து சிகிச்சையளிப்ப தற்கு போதிய பண வசதி இல்லா ததால் இவர்கள் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலால் அவதிப் பட்டு வந்தனர். 

இந்நிலையில், கோவிந்தராஜ் பணி நிமித்தமாக வெளியூர் சென்ற போது, தாயார் அம்சவேணி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, அரளி விதையை அரைத்து தனது குழந்தைகளுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளார். குழந்தை கள், உணவு கசப்பாக இருப்பதாக தெரிவித்து அழுதுள்ளனர்.  இத னால் மனம் பதறிய நிலையில் தாய் அம்சவேணி,  குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக் கத்தில் அனைவரையும் சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தார். இதனை தொடர்ந்து அம்ச வேணி உட்பட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்  பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை அளிக்க பண வசதி இல்லாததால் தாய் உட் பட குழந்தைகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தைடயம் ஏற்படுத்தியுள் ளது.

அதிகரிக்கும் தற்கொலைகள்

இதற்கிடையே, கோவை  மாவட்டத்தில் சமீபகாலமாக சாணிபவுடர், அரளி விதை, எலி  மருந்து போன்ற பல்வேறு வகை யான பூச்சிக்கொல்லிகளை உண்டு தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அதிகரித்து வரு கிறது. கோவை அரசு மருத்து வமனையில் மட்டும் இரண்டு நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு கார ணங்களுக்காக விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்று சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர்  என்பது குறிப்பிடத்தக்க தாகும்.