tamilnadu

img

பொள்ளாச்சி : காவலர் தின மினி மாராத்தான் போட்டி

பொள்ளாச்சி, அக். 26- பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் காவலர் தினத்தை முன் னிட்டு, மினி மாராத்தான் போட்டி ஞாயிறன்று நடை பெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா முன்பு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டிக்கு, பொள்ளாச்சி மாவட்ட காவல் துணை கண் காணிப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மேலும், இப்போட்டியில் பங்கேற்ற அனைவ ருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் வழங்கினார்.