வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும் கூட, வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்புக் கூட்டம் திங்களன்று நடைபெறவில்லை. இதையடுத்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஆட்சியரக நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மனுப் பெட்டியில், தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டுச் சென்றனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியரக ஊழியர்கள் பொதுமக்களிடம் பதில் கூறி அனுப்பி வைத்தனர்.

;