திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

ரூ.21 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

கோவை, ஜன.3 -  கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப் பட்ட ரூ.21 லட்சம் மதிப்பிலான சிக ரெட்டுகளை சுங்கவரித்துறை அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.  கோவை விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து கோவை விமான  நிலையத்திற்கு வந்த ஸ்கார்ட் ஏர்  லைன்ஸ் விமானத்தில் வந்த பயணி களை கண்காணித்தனர். அதில் சந்தே கத்திற்கிடமாக  இருந்த கேரளா திருசூரை சேர்ந்த அபீஸ் என்ற  இளைஞரை பிடித்து சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் உரிய ஆவணங்கள் இன்றி  கடத்தி வரப்பட்ட ரூ.10.65 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.  இதேபோல் கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த  பிரீதின் ஏண்டோ என்ற இளை ஞரிடம் சோதனையிட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.10.80 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்தும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்கவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;