தருமபுரி, ஜன. 11- மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரப்பான சூழல் நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக 4 பேரும், அதிமுக ஒருவரும், பாமக 3 பேரும், வி.சி.க ஒருவரும், சுயேட்சை ஒருவரும் வெற்றிப் பெற்றுள்ளனர். மொரப்பூர் ஒன்றியக் குழு தலைவர் பதவியானது பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதில், திமுகவினர் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருப்ப தால் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு, திமுக மொரப்பூர் ஒன்றிய செயலர் இ.டி.டி.செங்கண்ணன் மனைவி சுமதி, ஒன்றியக் குழு தலை வர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டார். அதேபோல், அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சி.பெரு மாள் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு ஆதரவளிக்க மறுத்த சுயேட்சை
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தின் ஒன்றியக் குழு உறுப்பினராக, இருமத்தூர் பகுதியில் சுயேட்சையாக மு.ராஜலிங்கம் (எ) மாது என்பவர் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இவர், பாமக சார்பில் போட்டியிட அந்தக் கட்சியில் சீட்டு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பாமகவில் சீட் வழங்கப்படவில் லையாம். இதையடுத்து, அவர் சுயேச் சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். மு.ராஜலிங்கம் (எ) மாது ஒன்றியக் குழு உறுப்பினராக வெற் றிப் பெற்ற பிறகு, ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான போட்டியில் அதிமுக மற்றும் பாமக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என அந்தக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் அதிமுக கூட்டணியை ஆதரிக்காமல், திமுக வேட்பாளரை ஆதரித்துள்ளார். திமுகவினர் சாலை மறியல்
இச்சூழலில் மொரப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த சுமதி போட்டியிட்டு, அவ ருக்கு திமுக 4, வி.சி.க 1, சுயேட்சை ஒருவரும் ஆதரவு அளித்ததால் ஆளுங் கட்சியினரின் தலையீட்டால் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, தேர்தல் முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியினர், மொரப் பூர் ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகம் இருப்பதால், திமுக வேட்பாளர் சும தியை வெற்றிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தேர்தல் அலுவலர் அதிர்ச்சி
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தேர்தல் நடத்தும் அலுவலராக ஊரக வளர்ச்சித்துறை (சாலைகள் மற்றும் பாலங்கள் பராமரிப்பு) உதவி செயற் பொறியாளர் குமரேசன் நியமிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில், ஒன் றியக் குழுத் தலைவர் பதவிக்கான வாக்கு பதிவு செய்யும் இடத்தில், அதி முக மற்றும் பாமகவைச் சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப் படுகிறது. இதனால், தேர்தல் நடத் தும் அலுவலர் குமரேசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாததை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட் டனர். இச்சூழலில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை களைத்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர். மேலும், அரூர் காவல் துணை கண் காணிப்பாளர் ஏ.சி.செல்லப்பாண்டி யன் தலைமையில் 50க்கும் மேற் பட்ட போலீசார் மொரப்பூர் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மொரப்பூரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.