tamilnadu

தருமபுரி மற்றும் கோவை முக்கிய செய்திகள்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி, ஜூலை 7- தருமபுரியில் நடைபெற்ற தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 1627 பேர் பல்வேறு நிலையிலான பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித்துறை சார்பில் சனியன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தருமபுரி, சேலம், ஒசூர்,  திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி லிருந்து 76 நிறுவனங்கள் பங்கேற்று, அலுவலக உதவியாளர், கணினி இயக்குநர், தட்டச்சர், கணக் கர் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்ட பல் வேறு நிலையான பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்தன. முகாமில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 ஆம்  வகுப்பு, 10 மற்றும் பிளஸ் 2, பட்டம், பட்டயம், தொழில் கல்வி பயின்ற 3218 பேரும், மாற்றுத்திறனாளிகள் 34 பேரும் பங்கேற்றனர்.  இதில், 1627 பேர் பல் வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல், மாற்றுத்திறனாளிகள் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 6 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 121 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தன.  இதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்க ளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல் லூரி கலையரங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தலைமையில் நடைபெற்றது. கோவை மண்டல வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் லதா வரவேற்றார். மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். இதில், சார்-ஆட்சியர் ம.ப.சிவன் அருள், வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ம.காளிதாசன் மற்றும் அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

கோவை, ஜூலை 7- கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கான குறை தீர் கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி முதல் கூட்டம் வரும் ஜூலை 9ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக என மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

;