tamilnadu

கோவை மற்றும் நாமக்கல் முக்கிய செய்திகள்

காலாவதியான அஞ்சலக  ஆயுள் காப்பீட்டை புதுப்பிக்கலாம்

கோவை, நவ.12- காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள அஞ்சல் துறை அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை கோட்ட முதுநிலைக் கண் காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது, அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்திருப்பவா்கள் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தாமல் இருந்தால் அவா்களது காப்பீடு காலாவதி ஆகிவிடும். அவ் வாறு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிசியை புதுப்பிக் காதவா்கள் ஒருமுறை வாய்ப்பாக பாலிசியை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலிசியை புதுப்பிக்காதவா்கள் வரும் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய பிரீமியம் செலுத் தும் புத்தகம், உடல் நலனுக்கான மருத்துவச் சான்றுடன் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம். எனவே, பாலிசிதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் அலுவலர் பணியிடம்

நாமக்கல், நவ.12- பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியரை ராணுவத்தில் அலுவலராக நியமனம் செய்திட 2.2.2020 அன்று நடை பெறும் தேர்விற்கு விண் ணப்பங்கள் http://upsc online.nic.in என்ற இணை யதளம் மூலம் வரவேற்கப் படுகின்றன. ஆகவே, தகுதி யும், விருப்பமும் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் 19.11.2019க்குள் விண்ணப் பிக்குமாறு தெரிவிக்கப்பட் டுள்ளது. இத்தேர்விற்கான பயிற்சி முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.  மேலும் விபரங்க ளுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல  உதவி இயக்குநர் அலுவ லகத்தினை நேரில் அணுகு மாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;