tamilnadu

img

பொது வேலை நிறுத்தப் போராட்டம் - கோவை ஸ்தம்பித்தது கோவை, திருப்பூர் எம்பிக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது

கோவை, ஜன. 8 -   மக்கள் விரோத போக்கினை  கடைபிடிக்கும் மத்திய அரசிற் கெதிராக புதனன்று நடை பெற்ற அகிலஇந்திய வேலை  நிறுத்த போராட்டத்தில் கோவை யில் மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன்,இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்புராயன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங் கேற்று மோடி அரசிற்கெதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பி கைதாகினர். அமைப்பு சார தொழிலாள ருக்கான சமூக நலத்திட்டங்களை  செயல்படுத்த வேண்டும், மோட் டார் வாகன திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறுக, பொருளாதார  நெருக்கடியை திசைதிருப்ப  பிளவுவாத அரசியல்நடவடிக்கை யில் ஈடுபடாதே,மதத்தின்  பெயரால் மக்களை பிரிக்கும் சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை திணிக்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியுசி,  ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், எல்பிஎப் உள் ளிட்ட 10 சங்கங்கள் ஜன வரி 8 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது.  இதன்தொடர்ச்சியாக கோவையில் அகிலஇந்திய  வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் எழுச்சியோடு நடை பெற்றது. இதன்படி கோவை தபால் தந்தி அலுவலகம் முன்பு அனைத்து மத்திய  தொழிற்சங்கங்கள் இனைந்து நடத்திய வேலைநிறுத்த மறி யல் போராட்டத்திற்கு சிபி எம் கோவை நாடாளுமன் உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஐ  திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்ன தாக போராட்டத்தில் ஈடுபட் டவர்கள் மத்திய, மாநில அர சுகளின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.  இதில் ஐஎன்டியுசி தலைவர்  வி.ஆர்.பாலசுந்தரம், ஏஐடியுசி முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமு கம், மாவட்ட செயலாளர் சி.தங்க வேல், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜ மணி, சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன்,செயலாளர் எஸ் கிருஷ்ணமூர்த்தி,பொருளாளர்  ஆர்.வேலுசாமி, எல்பிஎப் மு.ரத்தி னவேல், எம்எல்எப் மு.தியாக ராஜன், ஏஐடியுசி தாமோத ரன் எஸ்டீடியு ஹசன் பாபு  உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்று கைதாகி னர். இதேபோல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஅங்கன்வாடி ஊழியர்களும், மத்திய மாநில அரசு பொதுத்துறை  நிறுவனகளின் ஓய்வுபெற்றோர் அமைப்பினரும் கோரிக்கை முழக் கங்களை எழுப்பி நூற்றுக்கணக் கானோர் கைதாகினர்.   திருச்சிசாலை எல்ஐசி அலுவ லகம் முன்பு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை நிறுத்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இனை செயலாளர் எம்.கிரிஜா,கோட்ட  தலைவர் கஜேந்திரன், செய லாளர் துளசிதரன், தென்மண்டல ஊழியர் சங்க இணை செய லாளர் வி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதேபோல் பிஎஸ்என்எல்  ஊழியர்கள் மனித சங்கிலி யாய் கைகோர்த்து வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். இதேபோல் ரயில் வே, விமான நிலைய ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள் ஆங் காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோவை பூமார்க்கெட் பகுதி யில் அனைத்து ஆட்டோ கூட்டுக்கமிட்டி சார்பில் சாலை  மறியல் போராட்டம் நடைபெற் றது. இதற்கு கூட்டுக்கமிட்டி தலைவர் பி.கே.சுகுமாறன் தலைமை தாங்கினார். இதில்  நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் இணைந்து வேலை நிறுத்த ஆதரவு மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, தலைவர் அமுதா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சந்திரசேகர் உள் ளிட்ட ஏராளமானோர் கைதா கினர். பொள்ளாச்சி புதிய பேருந்து நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு பொள்ளாச்சி சிஐடியு  ஒருங்கிணைப்பாளர் ஆர்.ேதுராமன் தலைமை வகித்தார். சிஐடியு கோவை மாவட்ட நிர்வாகி வேளாங்கண்ணி ராஜு, விவசாயி கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி,  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ,துரைசாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், ஏஐடியுசி சண்முகம்,  டிஎன்எஸ்டி,சி. சங்கத்தின் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,பிஎம்எஸ் சங்கத்தின் சார்பில் ரவி, பாலகுருசாமி, சிபிஐ அலுவலக செயலாளர் கே.வெங்கடாச் சலம், டிஎன்எஸ்டிசி ஓய்வூதி யர்சங்கத்தின் வேலுச்சாமி, மோகன்குமார்,பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப் பாளர் வி.சசிதரன், கருப்பசாமி, நடராஜன் ஆகியோர் பங்கேற்று கைதாகினர். ஆனைமலை நடைபெற்ற மறி யலுக்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.கனகராஜ் தலைமை வகித்தார்.  சிபிஎம்  தாலுகா செயலாளர் வி.எஸ்.பரம சிவம், மலைவாழ் மக்கள் சங்க  தலைவர் கே.பத்மினி, இந்திய மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.      மேலும் மத்திய தொழிற்சங்கங் களின் கோரிக்கைக்கு ஆதரவு  தெரிவித்து சிறு,குறு தொழிற்சா லைகள், ஹோட்டல், பேக்கரி, சிறு டீக்கடைகள் தொழிற்சாலை கள் மற்றும் கடைகளை அடைத்து  தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத் தினர். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நடை பெற்ற வேலை நிறுத்த போராட் டத்தால் கோவை மாவட்டம் ஸ்தம்பித்தது

;