திருப்பூர், ஜன. 6 – இந்திய மக்களின் ஒற்று மைக்கும், மாணவர்களின் நல னுக்கும் எதிராகச் செயல்படும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை தடை செய்யுமாறு இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து திங்களன்று இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.பிரவீன் குமார், மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து ஆங்கில அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த வி.டி.சாவர் க்கர், தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஆகியோரை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத சீர்கு லைவு அமைப்பு அகில பாரத வித்யார்த்தி பரிஷத். இந்த அமைப்பு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களையும், பேராசிரியர்களையும் அத்துமீறி உள்ளே புகுந்து முகமூடியுடன் கையில் இரும்புக் கம்பி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் தாக் கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 30க்கும் மேற் பட்ட மாணவர்கள் தீவிர சிகிச் சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தேச விரோத, மாணவர் விரோத பயங்கரவாத அமைப்பான ஏபிவிபி அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அத்துடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட னர். இதில் மாணவர் சங்க மாநிலத் துணத் தலைவர் க.நிரு பன் சக்கரவர்த்தி உள்பட மாண வர்கள் கலந்து கொண்டு ஏபிவிபி அமைப்புக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.