tamilnadu

img

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுரை

தருமபுரி, செப்.4 - குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி யுள்ளார் . அரூர் ஊராட்சி ஒன்றியம், எம்.வெளாம் பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சுண்டக் காப்பட்டியில் 20க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த  மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருப்பதாக புகார் தெரிவித்தனர். இது  குறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட  ஆட்சியர் சு.மலர்விழி, சுண்டக்காப் பட்டியில் செவ்வாயன்று திடீர் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் போது கிராம மக்களிடம் ஆட்சியர் கூறுகையில், பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் குடிநீரை நேரடி யாக குடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் மழைநீர் கலந்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதி யிலும் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும்.  சுண்டாக்கப்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தனி நபர் கழிப்பிட வசதிகள், மகளிர் சுகாதார வளாகங்கள் ஏற் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீடு  இல்லாதோருக்கு பசுமை வீடுகள், மத்திய அரசின் தொகுப்பு வீடுகள் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும். அதேபோல், குடி யிருப்பு பகுதியிலுள்ள கழிப்பிட கால் வாய்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டி, வட்டாட்சியர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார்,  ஆறுமுகம், கொங்கவேம்பு வட்டார  மருத்துவ அலுவலர் அழகரசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.