tamilnadu

தருமபுரி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

முயல் வேட்டை:  ரூ.20 ஆயிரம் அபராதம்

தருமபுரி, ஜன.18- மொரப்பூர் அருகே சனியன்று முயல்களை வேட்டை யாடிய இருவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகப் பகுதியில்  பொங்கல் பண்டிகையையொட்டி, வனச்சரகர் தீ. கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மொரப்பூர்- கல்லாவி சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகமான முறையில் இருசக்கர வாக னத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில், கோணிப் பையில் இரண்டு முயல்கள், ஏழு கவுதாரிகளை கம்பி வலைகள் வைத்து பிடித்துச் செல்வது தெரியவந்தது. விசா ரணையில், இருவரும் ஊத்தங்கரை வட்டம், வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்த காவேரி (44), செந்தில் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட இரு வரையும் வனத்துறையினர் கைது செய்து தருமபுரி மாவட்ட  வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து, வன விலங்குகளை வேட்டை யாடிய குற்றத்துக்காக இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட  வன அலுவலர் உத்தரவிட்டார்.

நின்றிருந்த லாரியில்  ஆம்னி பேருந்து மோதி ஒருவர் பலி

ஈரோடு, ஜன.18- கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து ஆம்னி பே ருந்து ஒன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திற்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டி ருந்தது. இப்பேருந்தானது சேலம் - கோவை தேசிய நெடுஞ் சாலையில் சித்தோட்டை அடுத்த நசியனூர், சாமி கவுண்டன்பாளையம் அருகே சென்றபோது பேருந்து நிலை தடுமாறி, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின்  பின்பகுதியில் மோதியது. இவ்விபத்தில் பேருந்தின் இடது புறம் அமர்ந்திருந்த திண்டுக்கல்லை சேர்ந்த குப்புசாமி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பயணிகள் பலர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ் விபத்து குறித்து சித்தோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தில் இருவர் பலி

கோவை, ஜன.18- கோவையில் நடந்த விபத்தில் தனியார் ஊழியர் உட்பட இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், வேடப்பட்டி ஸ்ரீவள்ளிநகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (49). தனியார் நிறுவன ஊழியரான இவர் வியாழனன்று நீலாம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் பலி யானார். இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இதபோல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்ராஜ் (25). இவர் வியாழனன்று கருமத்தம்பட்டி அருகேயுள்ள கொல்லுப்பாளையம் பிரிவு அருகே நடந்து சென்றுள்ளார். அச்சமயம் அந்த வழியாக வந்த  தனியார் பேருந்து ஒன்று மோதியதில் சம்பவ இடத்தி லேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருமத்தம் பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வீடுகள் கட்டித் தர பட்ஜெட்டில் நிதி ஒதுக்க எம்.பி. கே.சுப்பராயன் கோரிக்கை

திருப்பூர், ஜன. 18 – தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வீடுகள் கட்டித் தர வரக்கூடிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குமாறு மத்திய  அரசிற்கு திருப்பூர் எம்.பி. கே.சுப்ப ராயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டிருப்பதாவது: அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் பின்னலாடை தொழில் நெருக்கடியைச் சந்திக்கும் நிலையில், இங்குள்ள சிறு,  குறு தொழில்களை நம்பி நேரடி யாகவும், மறைமுகமாவும் வேலை வாய்ப்பு பெற்று வரும், 8 லட்சம் பேரின் வாழ்க்கை மிக மோசமான வாழ்வியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.  எனவே வளர்வதற்கு ஏராள மான வாய்ப்புள்ள திருப்பூர் ஆடைத் தொழிலுக்கு தேவையான சிறப்பு சலுகைகளையும், தனிச்சிறப்பான ஊக்கத் தொகை மற்றும் வரி விலக்கு வழங்க வேண்டும். மிகப்பெரும் ஜவுளிப் பூங்கா  அமைப்பது, சூரிய சக்தி, காற்றாலை மின் உற்பத்திக்கும் ஊக்கமளிக்க வேண்டும். திருப்பூரை மலரச் செய்யும் தொழி லாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. எனவே இத்துறையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்த விலை வீடுகள் கட்டித் தர வேண்டும். வரக்கூடிய பட்ஜெட்டில் இதற்காக உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருப்பூர் புத்துயிர் பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். எனவே இன்றைய பொருளாதார மந்த  நிலையில், திருப்பூரை மீட்டமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் கே.சுப்ப ராயன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரூ.134 கோடி மகப்பேறு நிதியுதவி:  மாவட்ட ஆட்சியர் தகவல் 

தருமபுரி, ஜன.18- தருமபுரி மாவட்டத்தில்  டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும்  திட்டத்தின் கீழ் 2011  முதல் டிசம்பர் 2019 வரை ரூ.134.60 கோடி மதிப்பில்  1,49,918 தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையின் மூலம் பொதுமக்கள் நலனுக் காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நகரும் மருத்துவமனைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து தாய் மார்கள் வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப  சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரி யாக 43க்கும் மேற்பட்ட பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு  ரூ.18 ஆயிரம் வழங்கப் படுகிறது. இத்தொகை கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிரசவித்த  தாய்மார்கள் சத்தான உணவு உண்டு தாய் மற்றும்  குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும் என்பதற் காக வழங்கப்படுகிறது. மேலும் பிரசவித்த தாய்மார்கள் ஆரோக்கியத்துடன் இருக்க அடுத்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 2 வருட இடைவெளி இருக்க வேண்டும். இதன் அவசியத்தை உணர்ந்து ரூ.18 ஆயிரம் முழுத்தொகை பெறு வதற்கு பிரசவித்த தாய்மார்கள் தற்காலிக மற்றும் நிரந்தர  கருத்தடை சிகிச்சை முறை செய்து கொள்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும். மாவட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும்  திட்டத்தின் கீழ் 2011 முதல் டிசம்பர்  2019 வரை ரூ.134.60 கோடி மதிப்பில்  1,49,918 தாய்மார் களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது  என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். 

;