tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலுக்கு கண்டனம்

சேலத்தில் இடதுசாரி கட்சிகள்  ஆர்ப்பாட்டம்

 சேலம், ஜன.6- தில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் களைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள்  சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். போராடும் மக்கள் மற்றும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்கு தல்களைக் கண்டித்தும், அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதர ரித்தும் சேலத்தில் இடதுசாரி கட்சி கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.சிபிஐ மாவட்ட செயலாளர் எ. மோகன் தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி,  சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர்  கோ. மோகனசுந்தரம் ஆகியோர் உரை யாற்றினர்.  முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர். குழந்தைவேல், எம்.குண சேகரன், எம். சேதுமாதவன், ஐ. ஞான சவுந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.கனகராஜ், பி. சந்திரன், பி.ரமணி, பி.பாலகிருஷ்ணன், ஜி.கண்ணன், என்.பிரவீன்குமார், சிபிஐ மாவட்ட பொருளாளர் ராமன், மாநிலக்குழு உறுப்பினர் பரமசிவம், விமலன், முருகன், கருணை தாஸ், சிபிஐ (எம்.எல்) மாநில குழு உறுப்பி னர் சந்திரமோகன், நிர்வாகிகள் வேல் முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.