கோவை, ஜன.26- கோவை மாநகராட்சியில் தூய்மைக்கான கணக்கெடுப்பு-2020 பணியில் பொதுமக்கள் அனைவரும் ஜன.31 ஆம் தேதி வரை கருத்துக் களை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையா ளர் மற்றும் தனிஅலுவலர் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில் தூய்மைக்கான கணக்கெ டுப்பு-2020 பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை யில் நடைபெற்றது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள் ளதாவது, நாடு முழுவதும் ஜன.4 முதல் ஜன.31 ஆம் தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து நகரங்களையும் தூய்மையின் அடிப்படையில் தரவரிசை கண்டறியவும், ஸ்வச் சர்வேஷன்-2020 இந்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்ச கம் மூலம் நடத்தப்படுகிறது. எனவே, கோவை மாநகராட்சி பொதுமக்கள் அனைவரும் கோவை மாநகரின் தூய்மைக்கான தங்களின் வாக்கு களை 1969 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், கைபேசியில் (Swachh Survekshan 2020 (APP) செயலி வாயிலாகவும், http://swachhsurv ekshan2020.org/CitizenFeedback என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். எனவே மாநகராட்சியின் அனைத்து பகுதிகளி லும் தூய்மைப் பணிகளை சம்மந்தப்பட்ட அலு வலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.