செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து சனியன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சார பொதுக்கூட்டம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து சனியன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் அறிவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம், ஏ.ராதிகா மற்றும் காங்கிரஸ், மதிமுக, கொமதேக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

;