tamilnadu

img

மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே சிஏஏ வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் பேச்சு

கோவை, ஜன. 23– இந்தியா நாட்டின் அடையாளமே மதச் சார்பின்மையும், ஜனநாயகமும்தான். அத னையே தகர்க்கும் வேலையைத்தான் மோடி  அரசு மேற்கொண்டு வருகிறது என வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.ஏ.முக மது ரியாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய பாஜகு அரசு சிஏஏ, என்ஆர்சி,  என்பிஆர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி யும், மாநில அதிமுக அரசு குடியுரிமை சட்டத் திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வலியுறுத்தியும் கோவையில் புத னன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை சித்தாபுதூர் பகுதி யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வாலி பர் சங்க கோவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் தலைமை தாங்கினார். தலைவர் ஸ்டாலின்குமார் வரவேற்புரை யாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், வாலிபர் சங்கத்தின் அகில இந் திய தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ், மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செய லாளர் எஸ்.பாலா மற்றும் மாநில நிர்வாகிகள் சி.பாலசந்திரபோஸ், எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  முன்னதாக,  பி.ஏ.முகமது ரியாஸ் உரை யாற்றுகையில், மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மதத்தின் பிரச்சனையாக வாலிபர் சங்கம் பார்க்க வில்லை. மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் தாக்குதலாகத்தான் பார்க்கிறது. மதச்சார் பின்மையும், ஜனநாயகமும்தான் இந்தியா இந்தியாவாக இருக்க காரணமாக உள்ளது. அவற்றின் மீதுதான் இன்று தாக்குதல் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. 1949 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னாள் நமது தலைவர்கள் நீண்ட விவாதம் நடத்தி இச்சட்டத்தை உரு வாக்கினார்கள். அவர்கள் இச்சட்டத்தில் எதனையெல்லாம் வேண்டாம் என்று புறந் தள்ளினார்களோ, அதனைத்தான் இன்று பாஜகவின் தலைமையிலான மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. அரசமைப்பு சட்டத்தை தகர்த்து இன்று இச்சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.  டிசம்பர் 9 ஆம் தேதி மக்களவையிலும், டிசம்பர் 14 ஆம் தேதி மாநிலங்களவையிலும் இந்த சட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அன்று தமிழகத்தை ஆளும் அதிமுக நினைத் திருந்தால் குடியுரிமை சட்ட மசோதா, குடியு ரிமை சட்டமாக மாறியிருக்காது. அன்று தேசத்தின் விடுதலையை காட்டிக்கொடுத்த வர்களைபோல்,  இன்று அதிமுக வாக்களித் ததன் மூலம் அந்த இடத்தில் நிற்கிறது.  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 144 மனுக்கள் போடப் பட்டிருக்கிறது. இதில் வாலிபர் சங்கத்தின் ஒரு மனுவும் உள்ளது. 144 என்கிற எண் மத்திய அரசுக்கும், இங்கே உள்ள மாநில அரசுக்கும் பிடித்த எண். போராடுகிற மக் களை ஒடுக்குவதற்காக இந்த 144 சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். அதே எண்ணிக்கை யிலான மனுக்கள் இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  மத்திய அரசு இப்போது உச்சநீதி மன்றத்தில் 4 வார கால அவகாசத்தை கேட் டுள்ளது. இதன்காரணமாக பிரச்சனையை தள்ளிப்போடலாம், தணிக்க முடியும் என  நினைத்தால் அது நடக்காத ஒன்று. நான்கு  வாரமல்ல, நான்கு ஆண்டுகளல்ல, நாற்பது வருடம் என்றாலும் எங்களுடைய போராட் டத்தின் தீவிரத்தை குறைத்துவிட முடியாது.   வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொருளாதார தோல்வி ஆகியவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே பாசிச நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இவர்கள்தான் காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து காஷ்மீர் மாநிலத்தை துண்டாடி இருக்கிறார்கள். நான் இரண்டு காஷ்மீரிகள் குறித்து பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் மீர் முகம்மது மக்கூர் சேர்வானி மற்றும் முகம்மதின் சாகீர்.   யார் இந்த மீர் முகம்மது மக்கூர் சேர்வானி. இந்தியா விடுதலை பெற்றதற்கு பின்னர்  காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தபோது, லட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். கொடூரமாக வதைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தான் படையை விரட்டியடிக்க இந்திய படைகள் வந்து கொண்டிருந்தது. இந்திய படைகள் வந்து சேரும்வரை பாகிஸ்தான் படைகள் முன்னேறி செல்லாமல் தடுக்க மீர் முகம்மது மக்கூர் சேர்வானி பாகிஸ்தான் படைக்கு தவறுதலான வழியை காண்பித்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார். பிறகு இந்திய படைகள் வந்து பாகிஸ்தான் படையை விரட்டியடித்து காஷ்மீரை மீட்டு இந்தியா மாபெரும் வெற்றியை பெற்றது. திட்டமிட்டேதான் மீர் முகம்மது மக்கூர் சேர் வானி நமக்கு தவறுதலான வழியை சொன் னார் என தெரிந்து பாகிஸ்தான் படையி னர் பீர் முகம்மது மக்கூர் சேர்வானியை சிலு வையில் அறைந்து கொடூரமாக அங்குலம் அங்குலமாக வெட்டி கொலை செய்தனர். மீர் முகம்மது மக்கூர் சேர்வானியின் நினைவாக காஷ்மீரில் நினைவு மண்டம் அவரின் தியாகத்தை உச்சரித்து கொண்டிருக்கிறது.  இதேபோல் முகம்மதின்சாகீர். 1960களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, ஆடு மேய்க்கும் சிறு வனாக பாகிஸ்தான் ராணுவத்தோடு சுற்றித்திரிந்து இந்திய படைகளுக்கு உள வுத்தகவல் கொடுத்து காஷ்மீர் மண்ணை காத்தவன் இந்த இஸ்லாமிய இளைஞன். இவருக்கு அன்று மத்திய அரசு பத்மபூசன் விருது கொடுத்து கௌரவித்தது. அந்த இளைஞனிடம் அரசு உனக்கு என்ன வேண்டு மென்றாலும் கேள் தருகிறோம் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தியபோது, எனக்கு பிலிப்ஸ் ரேடியோ ஒன்று கொடுங்கள் போதும் என்றான். இது சாதாரண விஷயம். வேறு ஏதா வது பெரிதாக கேள் என்று அரசு அவனிடம் வற்புறுத்தியது. அப்போது அவன் எனக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளை திருமணம் செய்து கொள்ள அவரின் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களின் சம்மதத்தை பெற்று கொடுங்கள் என்றான். அரசும் அந்த பெண்ணின் வீட்டாரிடம் பேசி சம்மதம் பெற்று திருமணம் செய்து கொடுத்தனர். அன் றைய நமது அரசு சாமானியன் ஒருவனின் காதலை புரிந்து திருமணம் செய்து வைத்தது என்பதுதான் நமது வரலாறு. ஆனால் இவர் கள் லவ் ஜிகாத் குறித்து பேசிக்கொண்டி ருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல இந்திய விடுத லைக்காக சாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடினார்கள். தியாகம்  செய்தார்கள். இந்திய நாட்டின் விடுதலைக் கான போராட்டத்தில் நமது தலைவர்கள் தங்களது நாவின்மையால் ஆற்றல் மிகுந்த கனல் பேச்சுக்களால் மக்களை விடுதலை போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தார்கள் என்பது வரலாறு. ஆனால், ஆர்எஸ்எஸ்சின் விடுதலை போராட்ட வரலாறு என்பது மன் னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தும், பிரிட்டீசா ரின் காலனிகளை நாவால் பாலிஸ் செய்து கொடுத்ததும்தான். கண்ணீர் விட்டு கத றாமல் உயிரை கொடுத்த பாரம்பரியம்தான் நமக்கான வரலாறு.  இன்று இந்திய மக்க ளின் குடியுரிமை குறித்து ஆர்எஸ்எஸ், பாஜக வினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்திய விடுதலை போராட்டத்தில் ஏராளமானோர் உயிர்த்தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர். அத்த கைய போராட்டத்திற்கு பெரும் பங்கை  செலுத்தியது கோவை மண். விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற மலபார் வீரர் களை கோவையில்தான் தூக்கிலிட்டார்கள். இப்படி விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற  வீரர்கள் சிந்திய ரத்தத்தாலும், தியாகத்தா லும் சிவந்தது நமது பாரம்பரியம். அத்தகைய வீரத்தோடு முன்னோக்கி செல்வோம். அதேநேரத்தில் சில இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் இச்சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு பேராபத்து போன்ற தொரு அச்சத்தை உருவாக்குகிறார்கள். இதன்மூலம் வன்முறையை உருவாக்க முயல் கிறார்கள். இதனை ஒருபோதும் வாலிபர் சங்கம் அனுமதிக்காது. இந்திய அரசியல் அமைப்பை பாதுகாக்கும் போராட்டத்தில் அனைத்து தரப்பு இளைஞர்களையும் ஒன்றி ணைப்போம். வலுமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.  முன்னதாக, இவரின் மலையாள உரையை வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார் தமிழில் மொழி பெயர்த்தார். 

முட்டாள்களின் பேச்சல்ல - முட்டாளாக்கும் பேச்சு
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாலிபர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், பாஜக தலைமையி லான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்க ளுக்கு எதிரானது. ஆகவே அவர்கள் போரா டுகிறார்கள் என திட்டமிட்டு கட்டமைக் கப்படுகிறது. காவல்துறையும் இஸ்லாமி யர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இதற்கெதிராக போராட்டம் நடத்த அனு மதிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த மக்க ளுக்கும் எதிரானது என்பதை மக்களுக்கு எடுத்துச்செல்ல நகரப் பகுதியில் இயக்கங் களுக்கு காவல்துறை அனுமதிப்பதில்லை. முதன்முறையாக வாலிபர் சங்கம் காவல் துறையினரின் தடையை தகர்த்து பேரணி, பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி யுள்ளது என்பதால் வாலிபர் சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களும், பாரட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறேன். நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொ டரில் ஏராளமான மசோதாக்கள் தாக்க லாகியுள்ளன. அதில் எஸ்சி,எஸ்டி மக்களுக்கு வழங்கி வரும் இடஒதுக்கீடு மசோதாவும் ஒன்று. இதனை அனைத்து கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தது. ஆனால் ஆட்சி யில் உள்ள பாஜக அரசு கொண்டு வந்த தீர் மானத்திற்கு எதிராக பாஜகவின் மூன்று உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண் டும். அதேபோல் ஆங்கிலோ இந்தியருக்கான நியமன உறுப்பினர்களை நியமிக்க அவசி யம் இல்லை என ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் அம்மக்களின் உரிமையை பறித்துள் ளார்கள். இவர்களால் அவர்களுக்குத்தான் ஆபத்து, எனக்கொன்றும் இல்லை என்று அமைதியாக இருப்போமானால், நாளை அந்த ஆபத்து நமக்கும் வரும். அப்போது நமக் காக குரல் எழுப்ப யாரும் இல்லாமல் போவார் கள் என்பதை உணர்ந்து நாம் ஒன்றுபட்டு போராட வேண்டிய காலமாய் இந்த காலம் உள்ளது என்றார்.  மேலும், நாடாளுமன்றத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பி னால் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை. ஆகவே அது குறித்து எனக்கு தெரிய வேண்டியதில்லை என நிதியமைச்சர் சொல்கிறார். ரூபாய் நோட்டில் லட்சுமி படம் போட்டால் இந்திய பொருளாதாரம் உயரும் என்று சுப்பிரமணி சுவாமி சொல்கிறார். இப் போது 50 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் நடந்தது குறித்து ரஜினியை வைத்து பேசவைப்பது என இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர்கள் பலர் பேசுவதை கேட் டால் முட்டாள்கள் பேசுவதைப்போல் தோன் றும். ஆனால் அவர்கள் இதனை தெரிந்து தான் பேசுகிறார்கள். இந்த பேச்சு நமது கவனத்தை திசைதிருப்பி நம்மை முட்டாள் ஆக்குவதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஐந்தாண்டு காலம் உங்களை ஆட்சியில் அமர்த்தியது ஆள்வ தற்குத்தானே தவிர இந்திய நாட்டை பிளவு படுத்த அல்ல என நாடாளுமன்றத்தில் நேரி டையாகவே கேள்வி எழுப்பியவர்கள் நாங்கள்.  தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் முன் மொழிந்தால் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் கூறுகிறார். தமிழக மக்கள் ஏற்க னவே பாஜகவிற்கு எதிராக 38 எம்பிக்களை கொடுத்து தீர்மானம் நிறைவேற்றிவிட் டார்கள் என்பதை ஆளும் அதிமுக அரசு உணரவேண்டும். கேரளாவிற்கு அடுத்து பஞ்சாப் மாநிலமும் இப்போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனி மே.வங்கம், ராஜஸ்தான் என அடுத்தடுத்த மாநிலங்க ளும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யா மல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் உறுதியான தீர்மானத்தை வருகிற காலங்களில் நிறைவேற்றுவார்கள். இவ் வாறு பி.ஆர்.நடராஜன் கூறினார்.

;